ஏப்ரல் 14-ல் வெளியாகும் சிவலிங்கா….

siva
கன்னடத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘சிவலிங்கா’ படத்தை இயக்குநர் பி. வாசு தமிழில் மறுபதிப்பு செய்துள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

இந்த சிவலிங்கா திரைப்படம் ஒரு கிரைம் ஹாரர் திரில்லர் படம். கடந்த பிப்ரவரி 12-ம்தேதி கன்னடத்தில் இப்படத்தை இதே பெயரில் ரிலீஸ் ஆகியது. இதில் சிவராஜ் குமார் நடித்திருந்தார். இப்படம் 85 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகும். சந்திரமுகிக்குப் பிறகு கன்னடத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படம் தான் சிவலிங்கா.

இப்படத்தில் ஒரு பையன் ரெயிலில் சென்றுகொண்டிருக்கிறான். அவன் தனது வளர்ப்பு புறாவையும் உடன் கொண்டு செல்கிறான். கடைசி ரெயில் என்பதால் அந்த கம்பார்ட்மென்டில் யாரும் இல்லை. எனவே, அவன் தூங்கலாம் என நினைத்து படுக்கிறான். அப்போது அந்த கம்பார்ட்மென்டில் இருந்து கண்தெரியாத ஒருவன் எழுந்து நடந்து வாசல் பக்கம் செல்கிறான்.

அபொழுது உடனே புறா அந்த பையனை எழுப்புகிறது. அவன் எழுந்து குருடனை காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால், அவனோ திடீரென காப்பாற்ற வந்த பையனை கீழே தள்ளி கொல்கிறான்.
பின்னர் அவனது ரத்தம் அந்த புறாவின் மீது விழுகிறது. இப்போது அந்த புறாதான் கொலைக்கு சாட்சி. அந்த புறா, இந்த கொலையை செய்தது யார் என்பது குறித்து கதாநாயகனிடம் சொல்வதுதான் கதை. புறா எப்படி சொல்கிறது? என்பதுதான் மீதி கதை.

இப்படத்தை அனைவரும் திரையாரங்குகளில் சென்று பாருங்கள்.

Leave a Response