மக்கள் நலக் கூட்டணி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்குமா?

thirumaavalavan
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சாமிதோப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அய்யா வைகுண்டர் மக்களிடையே சமத்துவ குடியிருப்பு, சமபந்தி, சமத்துவ கிணறு போன்றவற்றை போதித்தவர். அவரது பிறந்தநாளை தமிழகத்தில் அரசு விடுமுறையாக அறிவிக்காதது வேதனை அளிக்கிறது. அவரது பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அவரது பிறந்தநாளில் ஆண்டுதோறும் மதுக்கடைகள் அடைக்கப்பட வேண்டும். திருவனந்தபுரம் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயர் சூட்ட வேண்டும். பள்ளி பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டர் வரலாற்றை சேர்க்க வேண்டும்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடவில்லை. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு நாளை கூடுகிறது. அதன்பிறகு மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 3 கட்சி தலைவர்களும் கூடி ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது ஆதரவளிப்பதா? என்பது குறித்து முடிவு செய்வோம். இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தி.மு.க.வுக்கு ஆதரவு தந்தால் வரவேற்போம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரின் எண்ணத்துக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னாரையும் தனுஷ்கோடியையும் பொதுமண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. சேதுபதி மன்னர்கள் ஆட்சி காலத்தில் கச்சத்தீவு உள்பட அனைத்து தீவுகளும் நமது கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது இலங்கை அரசிடம் இருப்பதால் மீனவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு வார காலமாகியும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Response