ஆர்.கே நகரில் போட்டியிடுவேன் தினகரன் சூசகதகவல்…

aiadmk
தமிழக ஆ.இ.அ.தி.மு.க. வின் தற்போதைய துணை பொதுசெயளலார் டி.டி.வி.தினகரன் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயங்கவில்லை என, கூறினார்.

அ.தி.மு.க.வின். தலைமை கலகத்தில், ஈரோடு மாநகர், புறநகர், கோவை மாநகர், புறநகர், திருப்பூர் மாநகர, புறநகர், நீலகிரி ஆகியமாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை, மாவட்ட வாரியாக, நேரில் சந்தித்து கட்சி பணிகளை குறித்து, துணைப் பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று ஆலோசித்தார்.

பின் அவர் அளித்த பேட்டி: ஆர்.கே.நகரில் அ.தி.மு.க., கட்டாயம் போட்டியிடும். விரைவில் ஆட்சி மன்றக் குழு கூட்டம் கூட்டப்படும். அதில், ஆர்.கே.நகரில் யாரை போட்டியிட வைக்கலாம் என்பது குறித்து, ஆலோசித்து முடிவெடுப்போம். ஆர்.கே.நகரில், எங்கள் வேட்பாளர் கூடுதல் ஓட்டுக்களைப் பெற்று, மாபெரும் வெற்றி பெறுவார். அப்போது தெரியும் சசிகலா டீம் எப்படிப்பட்டது என்று.

ஆட்சி மன்ற குழு ஒன்று கூடி, என்னையே வேட்பாளராக நிர்க்கசொன்னால் அதை மறுக்காமல் முழு மனதோடு நான் ஏற்றுகொள்வேன். இல்லை, சாதாரண தொண்டனை வேட்பாளராக்கினால், முழு மனதோடு அவரது வெற்றிக்குப் பாடுபடுவோம். அ.தி.மு.க.,வைப் பொறுத்த வரை, எல்லோரும் தொண்டர்கள்தான். அப்படியொரு ராணுவக் கட்டுப்பாட்டோடுதான், ஜெயலலிதா கட்சியை வளர்த்திருக்கிறார். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை நான் விமர்சித்து, அறிக்கை வெளியிட்டதும், அவர் டி.ஆர்.பி.ராஜாவை வைத்து பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதற்கு, எங்கள் தரப்பிலும், அமைச்சர் காமராஜ், பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இனி, ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிதான் எங்கள் ஒரே இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response