மருத்துவ முறைகேடு … கர்நாடகாவில் கருப்பையை இழந்துவரும் இளம் தாய்மார்கள்!

images
கர்நாடகாவில் வணிகநலனுகாக மருத்துவ முறைகேடு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இளம் தாய்மார்கள் தமது கருப்பையை இழந்துவரும் அவலநிலை தொடர்கிறது. அதிக அளவில் தாய்மார்களுக்கு கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை நடதபடுவதாக எழுந்த முறைகேட்டுப் புகார்களை அடுத்த 4 மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த 30 மாத காலகட்டத்தில் பெண்களின் கருப்பைகளை, குறிப்பாக ஏழை பெண்களின் கருப்பைகளை எந்த வித முறையான மருத்தவ காரணங்களும் இன்றி அகற்றி உள்ளது.இதனை அடுத்து அங்குள்ள 4 மருத்துவ மனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்லாரஹத்தியில் மாதவிடாய் காலத்தில் படும் சிரமங்களுக்காக பெண்கள் பயந்து கருப்பையை எடுக்க தாமே முன்வந்துள்ளனர் இதனை மருத்துவமனை தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு எண்ணற்ற தாய்மார்களுக்கு கருப்பையை அகற்றி இருப்பது பெரும்அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் மட்டும் 1.428 தேவையற்ற கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதில் 40% தாய்மார்கள் 35 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response