வாகனங்களுக்கு போலீசார் தீ! வீடியோவை பார்த்த கமிஷனர் விசாரணைக்கு உத்தரவு!!

Commissioner George
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தேவை என இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் அரபோராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் டெல்லி சென்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை சந்தித்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் நிறைவேற்றும்படி கேட்டுகொண்டார். பின்னர் பிரதமர் அவர்களின் அறிவுரைப்படி தமிழக முதல்வர் சட்ட ஆலோசகர்களுடன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுடன் கலந்தாலோசித்து பின்னர் அவசர சட்டம் நிறைவேற்றுவதற்கான வழிமுறை செய்தார்.

அந்த அவசர சட்டம் இந்திய ஜனாதிபதி திரு.பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி அவர்களின் ஒப்புதலுடன் ஜனவரி 21’ம் தேதி மாலை தமிழக பொறுப்பு ஆளுனரால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் பிரகடனம் படுத்தப்பட்டது. இந்நிலையில் ஆர்பாட்டக்காரர்களில் சிலர் அதாவது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நீதி மன்றத்தில் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக போராடி வருபவர்கள் முதல்வரை சந்தித்து இந்த அவசர சட்டத்தில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை ஏற்படுமோ என அய்யம் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய முதல்வர், அவ்வாறு தடை செய்ய முடியாத வகையில் இந்த அவசர சட்டம் ஏற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது நிரந்தர சட்டமாக அமைய வழிவகுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். முதல்வரின் இந்த உத்தரவின் பெயரில் ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் விலகினார்.

இருப்பினும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையில் இந்த அவசர சட்டத்தில் சற்று சந்தேகம் இருந்த காரணத்தினால் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை திரும்பபெற தயங்கினர். போலீசார் மற்றும் சில திரை பிரபலங்கள் போராட்டத்தை திரும்ப பெற அந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் தெரிவித்தனர். ஒரு சிலர் அவர்களுடைய அறிவுரையை கேட்டுக்கொண்டு போராட்டத்திலிருந்து விலகினார். ஆயிரம், லட்சம், ஆறு லட்சம் என மெரினாவில் குடியிருந்த போராட்டகாரர்கள், அவசர சட்டத்தை ஏற்றுக்கொண்டு குழு குழுவாக விலகினார். ஆனால் தங்களுக்கு திருப்தி இல்லை என்று குறி சில ஆயிரம் போராட்டகாரர்கள் அங்கு மெரினாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அங்கு போராட்டக்காரர்களை தவிர்த்து வேறு சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்து வந்தனர். போராட்டக்காரர்களை அப்புறவுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு நடைபெற்று அதில் காவல்துறையினர் தடி அடி நடத்தினார்.

இந்த தடி அடி ஆரம்பித்தவுடன் சிலர் அங்கிருந்து சென்றனர். சிலர் அங்கேயே போராட்டத்தில் இன்று வரை ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் உண்மைக் போராட்டகாரர்கள் இல்லாமல் சிலர் இந்த வன்முறையை துண்டினர் என்று சொல்லிவந்த காவல்துறையினர், ஆட்டோக்களை எரிப்பதும், வாகனங்களை சேதப்படுத்துவதும் மற்றும் வீடுகளுக்குள் சென்று அந்த வன்முறையாளர்களை தேடுகிறோம் என்று சொல்லி அந்த வீட்டில் இருந்த பெண்களை அடிப்பது போல் வீடியோ காட்சிகள் தொலைக்காட்சி மற்றும் சமுக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. ஆனால் சென்னை காவல்துறை ஆணையாளர் திரு.ஜார்ஜ் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், காவல்துறையினர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்த தடி அடி நடத்தவில்லை என்றும், காவல்துறையினர் எவ்வகை வன்முறைகளிலும் ஈடுபடவில்லை என்றும், சமுக வலைத்தளம் மற்றும் தொலைகாட்சிகளில் காட்டப்படும் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளவாறு உள்ளவை அனைத்தும் கிராபிக்ஸ் மற்றும் மார்பிங் என தெரிவித்தார்.

ஆனால் காவல்துறையினர் ஆட்டோக்களை எரிப்பதும், வாகனங்களை சேதப்படுத்துவதும் மற்றும் வீடுகளுக்குள் சென்று அந்த வன்முறையாளர்களை தேடுகிறோம் என்று சொல்லி அந்த வீட்டில் இருந்த பெண்களை அடிப்பது போல் வெளிவந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் உண்மை என எதிர்கட்சிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள் எதிர் குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ், காவல்துறையினர் வன்முறையில் ஈடுப்பட்டதாக சொல்லப்படும் வீடியோக்களை பார்த்து அந்த வன்முறை பற்றி விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

பொறுத்திருந்து பார்போம் காவல்துறையின் விசாரணை பாரபட்சமின்றி உண்மையாக விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்று?

Leave a Response