தனுஷ் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்


dhanush-al-pacino‘இறைவி’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் அதற்கான பணகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் அமெரிக்காவில் நடைபெறப் போவதாகவும், ஹாலிவுட் தரத்தில் உருவாகவிருப்பதால் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவரையும் நடிக்கவைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.

‘காட் பாதர்’, ‘சென்ட் ஆப் தி உமன்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களில் நடித்த அல் பசினோவிடம் தற்போது படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவகிறார்கள் ‘சென்ட் ஆப் தி உமன்’ படத்திற்காக இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தை தனுஷ் ஒரு பிரபல நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.


 

Leave a Response