லண்டன் டாக்டர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிகிச்சை


70th Independence Day celebration at Chennaiமுதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி முதல் உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 33 நாட்களாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் – சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் நுரையீரலில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 நாட்கள் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமும் அவரது உடல்நிலை தேறி வருகிறது.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே ஏற்கனவே 2 முறை சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். நேற்று மீண்டும் அவர் சென்னை வந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தகவல்களை கேட்டு பெற்றபிறகு சிகிச்சை அளித்தார்.

அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுக்கு டாக்டர் ரிச்சர்ட் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார்.

வெளிமாநிலங்களில் இருந்தும் அரசியல் பிர முகர்கள் பலர் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலைப் பற்றி டாக்டர்களிடமும், அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

ஜெயலலிதா குணம் அடையவும் கட்சி பாகுபாடின்றி அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


 

Leave a Response