தனுஷுடன் இணையும் மடோனா செபாஸ்டியன்


madona110216thumbதமிழில் ‘பவர் பாண்டி’ படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்  மடோனா செபாஸ்டியன். நடிகர் தனுஷ்  இயக்கும் முதல் படம், ‘பவர் பாண்டி’. ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக நடிக்க சில நடிகைகளிடம் பேசி வந்தனர்.

இப்போது மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த மடோனா, தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘கவண்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, தனுஷ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.


 

Leave a Response