காஷ்மோரா படத்தின் பட்டையை கிளப்பும் நயன்தாராவின் காட்சிகள்


kashவரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் ‘காஷ்மோரா’ படத்திற்கு ரசிகர்க்ள் இடையே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ‘காஷ்மோரா’ படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தில் நயன்தாரா நடிக்கும் பகுதி வெறும் அரைமணி நேரம்தான். ஆனால் அந்த அரைமணி நேரமும் ரசிகர்கள் திரையை வைத்த கண் எடுக்காமல் பார்ப்பார்கள் என்கிறார் இயக்குநர் கோகுல்.


 

Leave a Response