ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை


untitledஆளுநர் திரு.Ch.வித்யாசாகர் ராவ் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணி அளவில் பார்வையிட்டார்.

அப்போலோ மருத்துவமனையின் சார்மன் Dr.பிரதாப் C ரெட்டி சிகிச்சை கொடுக்கப்படுவதைப் பற்றி விரிவாக விளக்கினார். அப்போலோ மருத்துவமனையின் சார்மன் முதல்வருக்கு பல சிகிச்சைகள் கொடுத்துவருவதாகவும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஆளுநரிடம் தெரிவித்தார்.

ஆளுநர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் அறைக்குச் சென்று பார்த்தாக கூறியுள்ளார். முதல்வர் உடல்நிலை முன்னேறி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெறிவித்தார். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு ஆளுநர் நன்றி தெறிவித்தார்.

Dr.தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் I.A.S (Retd), Dr.J.ராதகிருஷ்ணன் I.A.S மற்றும் பலர் ஆளுநரை அப்போலோ மருத்துவமனையில் வரவேற்றனர்.


 

Leave a Response