ஆண்டவன் கட்டளை திரைவிமர்சனம்

aandavan-kattalai

தரமான திரைப்படங்களை மட்டுமே இயக்குவேன் என்று சபதம் எடுத்திருப்பார் போல மணிகண்டன் “காக்கா முட்டை”, “குற்றமே தண்டனை”, இந்த வரிசையில் “ஆண்டவன் கட்டளை” இணைந்துள்ளது. இந்த திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பு சில குறிப்புகள் போடப்பட்டது அதில் சமுதாய நலம் கருதி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் அவர் சொன்ன விஷயம் முற்றிலும் உண்மை “பொது சேவைகளைப் பெற இடைத் தரகர்கள் தேவை இல்லை… அவர்களை நாடாதீர்கள் .” எனும் கருவுடன் வெளிவந்திருக்கும் அருமையான திரைப்படமே ” ஆண்டவன் கட்டளை”.

இந்த திரைப்படத்தை பொருத்தவரை எல்லா குடும்பங்களும் கட்டிப்பாக சென்று பார்கலாம் படத்தில் ஒரு காட்சிக் கூட முகம் சுழிக்கும் வகையில் இல்லை அது மட்டும் அல்ல படத்தில் ஒரு இடத்திலும் புகைப்பிடிக்கும் காட்சியோ அல்லது குடிக்கும் காட்சியோ அல்லது பெண்களை ஆபாசமாக பேசும் காட்சியோ, ஐட்டம் டான்சோ, ஹீரோ ஹீரோயின் டூயட் என எந்த விதமான காட்சியும் இல்லாமல் இப்படி ஒரு அழகான அர்புதமான காட்சியை படமாக தந்துள்ளார் மணிகண்டன்.

நாம் சாதாரனமாக சொல்லும் சில பொய்கள் நம் வாழ்கையின் தடத்தையே மாற்றிவிடும் என்று ஒன்லையின் ஸ்டோரியுடன் ஆரம்பிக்கின்றது. படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர் “யோகிபாபு”, “விஜய் சேதுபதி” ஆகியோர் படத்தில் கலக்கியுள்ளனர்.

விஜய் சேதுபதி :-

படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் விதம் மிகவும் அழகாகவும் பார்க்க ரசிக்கும் தனமாகவும் இருந்தது. அதிலும் இந்த வசனம் “நாம நல்லா படிச்சிருந்தா டாக்டரா தான் ஆக முடியும் .. படிக்கலைன்னா அரசியல் ல குதிச்சு மெடிக்கல் காலேஜே ஆரம்பித்து கல்வி தந்தையாவே ஆயிடலாம்டா… ” என்று அவர் சொல்லும் போது பா என்னா நடிகன்டா அப்படின்னு சொல்ல வைக்கின்றார்.

யோகி பாபு :-

அவர் பேசும் வசனம் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் எல்லாமே சூப்பர், அதிலும் ., அவ்வளவு பெரிய உதடையும் , கோக்கு மாக்கான முகத்தையும் வைத்துக் கொண்டு நாடக ஆசிரியர் நாசரைப் பார்த்து ,எவ்வளவு பெரிய மூக்கு ? எனக் கேட்பதும் இன்னும் பிற சில்மிஷங்களில் ஈடுபடுவதும் தியேட்டரில் அரங்கமே சிரிப்பில் அதிர வைக்கின்றார். . யோகி பாபு கீப் இட் அப் நீங்கள் இன்னும் நிரைய திரைப்படம் நடிக்க வேண்டும் எங்களை மகிழ்விக்க வேண்டும்.

ரித்திகா சிங் :-

படத்தில் இவர் ஒரு பெண் நிருபராக வருகின்றார், அதுவும் பரபரப்பான விஷயங்களை பேட்டி எடுத்து போட்டு தாக்கும் தனியார் சேனல் வேலை பார்கினறார். திரைப்படம் முழுக்க இவரின் மேல் தான் பயணிப்பதால் அதை பொருட் படுத்தாமல் விஜய்சேதுபதிக்கு இனையாக நடித்துள்ளார். வாழ்த்துக்கள் ரித்திகா.

படத்தில் நடித்துள்ள எல்லா நட்சத்திரங்களும் தங்களால் முடிந்த வரை நடித்து தள்ளியுள்ளனர் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

இத்திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் :-

நடிகர்கள் :-

விஜய்சேதுபதி
ரித்திகா சிங்
நாசர்
பூஜா தேவாரியா
சிங்கம் புலி
யோகி பாபு

டெக்னிஷியன்கள் :-

அன்பு செழியன் (தயாரிப்பாளர்)
மணிகண்டன் (இயக்குநர்)
அருள் செழியன் (கதை)
கே (இசை)
அனுசரண் (எடிட்டர்)
ஷன்முக சுந்தரம் (ஒளிப்பதிவு)

இவர்கள் அனைவருக்கும் தரமான திரைப்படத்தில் உழைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

இயக்குநர் மணிகண்டன் இதைப் போன்ற கதைக்களங்களை எடுக்க வேண்டும் அதில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

மொத்ததில் தமிழ்சினிமாவின் அடுத்த கட்ட சினிமாவாக இந்த ” ஆண்டவன் கட்டளை ” இருக்கும் என்று சொல்லி எல்லோரும் இந்த திரைப்படத்தில் திரையங்குகளில் சென்று பாருங்கள் சந்தோஷமாக மன நிரைவுடன் திரும்புங்கள்.

– ஸ்ரீநாத்

Leave a Response