தொடரி திரைவிமர்சனம் – தியேட்டருக்கு போனா உங்களையும் செய்வாங்க…..

thodari-review
‘தொடரி’ படம் தனுஷ்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்த படம் ஓடுமா? ஓடாதா? என கதையை கேட்ட உடனே கண்டுபிடித்து விடலாம். எல்லோருக்கும் தெரிந்த, ஏற்கனவே பல படங்களில் பார்த்த ஒரு கதையை, எவ்வளவு மட்டமாக எடுக்க முடியுமோ அவ்வளவு மட்டமாக எடுத்துள்ளார் பிரபு சாலமன். ஒரு அனுபவம் உள்ள இயக்குனர், புதிய ஹீரோக்களை வைத்தே சிறந்த இயக்குனர் என பெயரெடுத்தவர், ஒரு பெரிய ஹீரோவை வைத்து இப்படி ஒரு சரக்கு இல்லாத ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்பது தான் வருத்தம்.

படத்தின் பட்ஜெட், படம் ஆரமிக்கும் முன்பே தெளிவாக முடிவு செய்துவிட்டு, படத்தை துவங்க வேண்டும். ஒருவேளை பட்ஜெட் அதிகமானால் தயாரிப்பாளார் தருவாரா? என தெரிந்து கொண்ட பின்பு படத்தை எடுக்க வேண்டும். படம் ஆரம்பித்தப்பின் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் படத்தின் தயாரிப்பாளர் பணம் தரவில்லையோ என்னவோ? ‘இந்தா உன் படம்’ என அரைகுறை கிராபிக்ஸ் காட்சிகளுடன் படத்தை, பொட்டலம் மடிப்பதுபோல் மடித்து கொடுத்துள்ளார் நம்ம இயக்குனர் பிரபு சாலமன். படத்தில் வெட்டி எறியப்பட வேண்டிய காட்சிகள் எது என ரசிகர்களே எண்ணி சொல்லும் அளவிற்கு படத்தில் நிறைய உள்ளன!அப்போ உருப்படியான காட்சிகள் இல்லையா என்று மனசுக்குள்ள நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது!!

சரி கிராபிக்ஸ் காட்சிகள் தான் சரியில்லை என்று பார்த்தால், படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டை. படத்தில் சொல்லும்படியான பாடல் ஒன்றும் இல்லை. பிபி, ஹாட் பேசன்ட் யாரும் தயவு செய்து படம் பார்க்க செல்ல வேண்டாம். சிரிக்க வைக்கிறேன் எனக் கூறி உங்களுக்கு பிபி-யை எகிற வைத்துவிடுவார்கள். பிரபு சாலமன் படத்தில் நடிகர்களை விட, நடிகைகள் பெயர் எடுத்துவிடுவார்கள். இதிலும் அப்படி தான். தனுஷுக்கு படத்தில் வேலையே இல்லை. படத்தின் மிகப்பெரிய மைனஸ் தனுஷ் தான். ‘மலைமேல போயி செத்து செத்து விளையாடலாம் வா’ என்பது போல் ரயில் மேல் நின்று படம் முழுவதும் வித்தை காட்டிக்கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு கதைக்கு தனுஷ் ஓகே சொன்னது ஏன்?

ரயில் வண்டியோ 120 கி.மீ. வேகதுக்குமேல் கட்டுபாடி இன்றி ஓடுகிறது, அப்போது கதாநாயகனும் கதாநாயகியும் ரயில் வண்டி மீது ஏறி கொண்டு ரோமான்ஸ் செய்வாங்களாம்? இன்னுமா ஆடியன்ஸை விஷயமோ லாஜிக்கோ தெரியாதவங்கன்னு நினைகிறது.

இந்த படத்தில் தனுஷை, பிரபு சாலமன் வெச்சி செய்துள்ளார். தனுஷ், கீர்த்தி சுரேஷை கிளைமாக்ஸில் வரும் முத்த காட்சியில் நன்றாக வெச்சி செய்துள்ளார். மொத்தப்படமும் தியேட்டருக்கு வருபவர்களை வெச்சி செய்துவிடும் போலிருக்கு.

மொத்தத்தில் மாறி மாறி செய்துள்ளனர். தியேட்டருக்கு போனா உங்களையும் செய்வாங்க. தனுஷ் நீங்க முதலில் நல்ல கதை கேட்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்புறம் மத்த காட்சிகளின் பெர்பார்மன்ஸ் பத்தி யோசிக்கலாம். பிரபு சாலமனுக்கு இந்த தொடரி’யின் தோல்வி தொடராமல் இருக்கணும்னா இனி நல்ல கதையை யோசிக்க தொடரனும். அடுத்த முயற்சி வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Leave a Response