இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி

unnamed

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு மாவட்டத்தில் இயற்கை    வேளாண் அங்காடியைநடிகர் ஆரி திறந்து வைத்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“கடந்த ஆண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை பயிர்விக்குமாறு விவசாயிகளிடம்கோரிக்கை வைத்தேன். அதன்படி விவசாயி ரங்கநாதன் என்பவர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில்இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிட முன்வந்தார். அவருடன் சேர்ந்து அந்த நிலத்தில்சேப்பங்கிழங்கு, வாழை, செம்பருத்தி, கற்றாழை உள்ளிட்ட பயிர்களை நட்டோம். தற்போது அந்தப்பயிர்கள் மூலம் விவசாயி ரங்கநாதனுக்கு 25 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது.

மேலும், இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை    தனது நிலத்தின்முன்னாலேயே ஆரி பசுமை அங்காடி எனும் பெயரில் விற்பனைக்கும் வைத்துள்ளார் ரங்கநாதன்.அந்த அங்காடியை திறந்து வைத்தேன்.

விவசாயி ரங்கநாதனுக்கு வேளாண் அதிகாரிகள் மூலமாக லோன் கிடைத்துள்ளது. முதல்தவணையாக ரூ.40 ஆயிரத்தை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளார். நிலத்தில் பயிர்செய்து,அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை ஆய்வு செய்த அவர்கள், ஆரோக்கியமான காய்கறிகள் என்றும்கூறியுள்ளனர். மேலும் அந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளை அழைத்து வந்து பயிர்களைபார்வையிட்டுள்ளனர். இயற்கை மாற்று விவசாயம் குறித்தும் அவர்களுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயி ரங்கநாதன் விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் இனிமேலாவது விவசாய நிலங்களை விளை நிலங்களாக மாற்றவேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். நீங்களே பயிர்செய்து இனி நேரடியாக நீங்களே விற்பனைசெய்ய முடியும். அதற்கு உதாரணம் இதோ விவசாயி ரங்கநாதனே இருக்கிறார்.திருவண்ணாமலையில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய மாற்றம் படிப்படியாக தமிழகம் முழுக்க பரவும்!

 

இவ்வாறு நடிகர் ஆரி தெரிவித்தார்.

Tags:

Leave a Response