பயம் ஒரு பயணம் – விமர்சனம்

bayam-oru-payanam-movie-review-rating

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கான மரியாதையே போச்சி என்று நாம் சொல்லிக் கொண்டிருந்த வேலையில் தான் “பயம் ஒரு பயணம்” என்ற திரைப்படம் திரைக்கு வந்துள்ளது இதில் என்ன அப்படி ஓரு வித்தியாசம் என்றால் பல பேய் திரைப்படத்தில் பேய் வரும் பழிவாங்கும் ஹீரோ காமெடியின் ஆகியோர் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் இதில் கதை என்னவோ அதை மட்டும் தான் அனைவரும் செய்துள்ளனர் தனியாக பார்க்க முடியாத அளவுக்கு இந்த படம் உள்ளது.

சரி வமர்சனத்தை பார்ப்போம் :-

போட்டோகிராபரான நாயகன் பரத் ரெட்டி, வித்தியாசமான புகைப்படங்கள் எடுப்பதற்காக தேக்கடியில் உள்ள காட்டுக்குள் பயணப்படுகிறார். புகைப்படங்கள் எடுத்து முடிப்பதற்குள் இரவாகிவிடுவதால் காட்டுக்குள்ளேயே இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார்.

இரவு அந்த வீட்டில் தங்கி தான் எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு அங்கு ஒரு மெமரி கார்டு கிடைக்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று எடுத்து பார்க்கிறார். அந்த மெமரி கார்டில் பெண்கள், ஆண்கள் என நண்பர்கள் கூட்டம் குடித்துவிட்டு, கும்மாளம் போடுவதுபோல் போட்டோக்கள் இருக்கிறது.

அதை பார்த்துவிட்டு, பத்திரிகையில் இருக்கும் தனது நண்பருக்கு போன் போட்டு சில விஷயங்களை கூறுகிறார். அப்போது, அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது. ஒரு பெண் பேய் அவரை விடாமல் துன்புறுத்துகிறது. இதனால், அங்கிருந்து அவர் தப்பித்து வெளியே வருகிறார்.

அவர் வரும்போது, ஒரு வருஷத்துக்கு முன்னால் நடந்த சம்பவங்கள், அப்போது இறந்து போனவர்கள் எல்லோரும் அவருடைய கண் முன்னால் வந்து போகிறது. எதனால் அப்படி தெரிகிறது? அந்த மெமரி கார்டுக்கும் அந்த பேய்க்கும் என்ன சம்பந்தம்? அந்த பேய் இவரை ஏன் விடாமல் துன்புறுத்துகிறது? என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.

கதையில் கதாநாயகனாக வரும் பரத் பேயை பார்த்து அவர் பயப்படும் போது யெல்லாம் நிஜமாகவே நம்மையும் சேர்த்து பயப்படுத்தியுள்ளார் அந்த வகையில் அவருக்கு வாழ்த்துக்கள்

கதாநாயகிக்கு அந்த அளவுக்கு படத்தில் நடிக்க இடம் இல்லையென்றாலும் அவருக்கு கொடுக்கப் பட்ட வேலையை அழகாக செய்து முடித்துள்ளார்.

ரெஜினா பேயாகவும் சும்மா கலக் கட்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் பல முறை அவரின் முகத்தை அவ்வுளளோ பெரிய திரையில் திடீர் என்று பார்க்கும் போது எல்லாம் நமக்கு பகீர் பகீர் என்று உள்ளது.

மொத்தத்தில் இந்த பயணம் நன்றாகவே உள்ளது இயக்குநர் 2ஆவது பாகத்திர்க்கு லீடு கொடுத்துள்ளார் அந்த தைரியத்துக்கு எங்க வாழ்த்துக்கள்.

Leave a Response