ராதிகாவை இப்படியா அவமதிப்பது? : சரத்குமார் கோபம்..!

1466683777_sarathkumar-has-been-hospitalised-due-food-poisoning

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தர்மதுரை. இதில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதியின் தாய் கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்திருந்தார்.

இந்த படத்தை நடிகரும், ராதிகாவின் கணவருமான சரத்குமார் சமீபத்தில் பார்த்து ரசித்தார். பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த படத்தை பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அதில் “தர்மதுரை படம் பார்த்தேன். டைட்டில் கார்டில் சீனியர் நடிகையான ராதிகாவை அவமதித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சீனியர் நடிகர், நடிகைகள் மதிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

தர்மதுரை ஒரு அழகான படம். கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டும். கதையும், திரைக்கதை சொல்லப்பட்ட விதமும், ராதிகா, விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா என எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள்.

படத்தின் இசை மற்றும் இயக்கம் அருமையாக இருக்கிறது. இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்காக இப்படத்தின் தயாரிப்பாளரை பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Response