சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் கோகுல இந்திரா’வை எதிர்த்து போட்டியிடும் நடிகர் குமரன்:

Youth & Students Party
அமைச்சர் கோகுல இந்திரா’வை எதிர்த்து நடிகர் குமரன் சென்னை அண்ணாநகரில் போட்டியிடுகிறார். 2010ல் வெளியான ‘தைரியம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் குமரன். அதனை தொடர்ந்து ‘வருஷநாடு’ மற்றும் பெயரிடப்படாத பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் யூனியன் தலைவர் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தேர்தலில் குறைந்த வயதில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல்(தமிழ்நாட்டில்) வேட்பாளர் குமரன்.

யூனியன் தலைவராக இவர் பணியாற்றிய போது வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம், எளிதில் மக்கள் அணுக கூடிய தலைவராக இவர் இருந்ததால் மாவட்ட ஆட்சித் தலைவரால் பல முறை பாராட்டப்பட்டார், இவ் அனுபவத்தின் காரணமாக 2003 ஆம் ஆண்டு இளைஞர் மற்றும் மாணவர்கட்சியை தொடங்கினார். இவ் அமைப்பின் வட்ட மாவட்ட குழுக்களை தமிழ் நாடு முழுவதும் உருவாக்கி மாணவர், இளைகர்களுக்கு உயர் கல்வி பயிற்சி வகுப்புகள், மாவட்ட மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வந்தனர்.
P.Kumaran Students & Youth Party
தற்போது நடைபெறவிர்க்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞர் மற்றும் மாணவர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு முழுமையும் பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக 125 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா நகர் தொகுதியில் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா’வை எதிர்த்து இளைஞர் மற்றும் மாணவர் கட்சியின் மாநில தலைவர் ப.குமரன் போட்டியிடுகிறார்.

Leave a Response