சாலையோர மழைநீர் கால்வாயில் வெளியேற்றப்படும் கழிவுநீர்:

Sewage Water Discharged in Storm Water Drain at Maduravoyal Ambattur Byepass
சென்னை மணலி முதல் தாம்பரம் வரை அம்பத்தூர் வழியாக செல்லும் பைபாஸ் சாலையில் குறிப்பாக நுளம்பூர்(முகப்பேர் மேற்கு) முதல் மதுரவாயல் வரையிலுள்ள சாலையோர மழைநீர் கால்வாயில் லாரிகளில் கொண்டுவரப்படும் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. கீழே உள்ள கானொளியில் காணப்படும் லாரியிலிருந்து (வாகனம் என்: TN 07 5392) வெளியேற்றப்படும் கழிவுநீர் சென்னை மாநகர துணை மேயர் பெஞ்சமின் வசிக்கும் (நுளம்பூர்-அடையாலம்பட்டு) வீடு அருகிலுள்ள சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் இன்று பகல் 12:00 மணியளவில் வெளியேற்றப்பட்டு கொண்டிருந்தது. அந்த லாரியின் ஓட்டுனரிடம்,இதை பற்றி கேட்டல் அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இதை பற்றி அங்கு வசிக்கும் சிலரிடம் கேட்டப்போது, தினம் சுமார் 5 முதல் 10 லாரிகளிலிருந்து கழிவுநீர் தினம்தோறும் வெளியேற்றப்படுவதாக தெரிவித்தனர். அந்த சாலையில் காவல்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டும், இத்தகைய செயல்கள் நடைபெறுகிறது என்றால் காவல் துறையினரின் அலட்சிய போக்கா அல்லது அவர்கள் எதற்காவது அடிப்பணிந்து விட்டனரா என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம்.

இந்த செய்தி வெளியீட்டுக்கு பிறகாவது எதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response