அடிப்படை வசதிகளை இழந்திருக்கும் திருமுல்லைவாயில் வாசிகள்:

image
சென்னை அம்பத்தூர் அருகில் இருக்கிறது திருமுல்லைவாயில். ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட இங்கு பிரசித்திபெற்ற மாசிலாமணீஸ்வரர் மற்றும் பச்சையம்மன் கோவில்கள் உள்ளன இதுமட்டுமின்றி இங்கு சுமார் 8 பள்ளிகூடங்களும் உள்ளன. சென்னை மாநகரில் வசித்த பலர் இங்கு, சுவையான தண்ணீர் மற்றும் சுத்தமான காற்று கிடைப்பதால் குடியேறியுள்ளனர்.

சுத்தமான தண்ணீரும் காற்றும் மட்டும் இருந்து என்ன பலன்? முக்கியமான அடிப்படை வசதிகளான நல்ல சாலை, கழிவுநீர் கால்வை இங்கு இல்லையே.

திருமுல்லைவாயிலில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு கழிவுநீர் கால்வை வசதி, பாதாள சாக்கடை வசதி எதுவும் கிடையாது. பெரும்பாலான வீடுகளின் கழிவுநீர், அவரவர் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சேர்க்கப்படுகின்றன. வீடுகளில் சேர்க்கப்பட்ட அந்த கழிவுநீரினை சில வீட்டினர் லாரிகள் மூலம் அகற்றிவிடுகின்றனர், சிலர் அந்த கழுவுநீரை சுத்தம் செயாமல் சாலைகளிலே வெளியேற்றிவிடுகின்றனர்.

சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் மற்றும் ஆங்காங்கே தேங்கும் மழைநீரினால், சாலைகள் சேரும் சகதியுமாக உள்ளன. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

திருமுல்லைவாயிலில் வசிக்கும் சிலரை இது பற்றி விசாரித்தபோது, பல வருடங்களாக அவர்கள் இங்கு வசிப்பதாகவும் சாலைகள் இதே போன்று குண்டும் குழியுமாக உள்ளன என்று புகார் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திடம் திருமுல்லைவாயில் வாசிகளுக்கு அடிப்படை வசதிகளான பாதாள சாக்கடை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, தெருவிளக்குகள், பேருந்து, மற்றும் நல்ல சாலைகள் வேண்டி மனுக்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த மனுக்களில் கூறப்பட்ட புகார்களில் தெரு விளக்கு மற்றும் பேருந்து வசதி மட்டும் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற முக்கிய அடிப்படை வசதிகளான, கழிவுநீர் கால்வாய், பாதாள சாக்கடை இதுநாள்வரை பொருத்தப்படவில்லை, பல வருடங்களாக பாழடைந்துள்ள சாலைகள் சீர் செய்யப்படவில்லை என குமுறுகின்றனர்.

இதுமட்டுமின்றி இந்த பாழடைந்துள்ள சாலைகளினால் பல இருசக்கர வாகன ஓட்டுனர்கள் விபத்தில் காயமடைந்துள்ளனர். இந்த குண்டும் குழியுமான சாலைகளினால் பலர் இடுப்பு மற்றும் முதுகு சம்பந்தமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.

இந்த அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் தான் ஏமாற்றம் என்றல், திருமுல்லைவாயலில் இருக்கும் கொசுக்களின் தொல்லையை சரியாக கண்டுகொள்வதில்லை. அதை பற்றி திருமுல்லைவாயிலை சேர்ந்த ஒருவர் கூறுகையில், அவர் இங்கு நிறைய கொசுக்கள் உள்ளதாகவும் அதை பற்றி சம்மந்தப்பட்ட துப்புரவு ஆய்வாளரிடம் பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.

இது உண்மையா? ஆமாம். இதை பற்றி நம் செய்தியாளர் திருமுல்லைவாயில் பகுதிக்கு பொறுப்புடைய துப்புரவு ஆய்வாளரிடம் புகார் செய்துள்ளார். நாம் புகார் செய்து ஐந்து நாட்களாகியும் இன்னும் கொசுக்களை ஒழிக்க ஆவடி பெருநகராட்சி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது உண்மை.

இப்போது கொசுக்களினால் டைபாய்டு, மலேரியா மற்றும் டெங்கு நோய்கள் அதிக அளவில் பரவி வருகிறது. டெங்குவால் தமிழகத்தில் நிறைய உயிரிழப்புகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாவம் திருமுல்லைவாயில் வாசிகள். இந்த செய்திக்கு பிறகாவது ஆவடி நகராட்சி, திருமுல்லைவாயில் குடியிருப்பாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கிறதா! கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்கிறதா!! என்று பார்ப்போம்.
image

image

image

image

image

image

image

1 Comment

Leave a Response