Sankara TV’s Bhajan Samraat – Who’s going to win Rs.10 Lakhs?? ஸ்ரீ சங்கரா டிவி’யின் பஜன் சாம்ராட்- ரூ. 10 லட்சத்தை வெல்லப்போவது யார்??

நமது பாரம்பரியங்களையும் பக்தி நெறிகளையையும் இன்றைய தலைமுறையினருக்கு அவர்களது விரும்பும் ஊடகமான தொலைக்காட்சி வழியாகச் சொல்லிக் கொண்டிருப்பதில் தன்னிகரகற்று விளங்கிக் கொண்டிருக்கிறது ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி.இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் மட்டுமல்லாது உலகின் 74 நாடுகளுக்கு ஸ்ரீ சங்கரா தொலைககாட்சியின் நிகழ்ச்சிகள் சென்றடைந்து நமது பாரம்பரியங்களைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சிக்கு மற்றுமொரு மகுடம் சூட்டும் விதமாக சில மாதங்களுக்கு முன்னால் பஜன் சாம்ராட் என்கிற குழு பஜனைக்கான போட்டியினை அறிவித்திருந்தது. பஜன் சாம்ராட் போட்டி இறுதிச்சுற்றுக்கு வந்ததை அடுத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பற்றியும் சங்கரா தொலைக்காட்சி பற்றியும் பேசிய அதன் CEO சுரேஷ்குமார், “ நமது கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சம் பஜன் பாடல்கள். இவை மிக எளியமையான மொழி நடையில், பாமரனும் புரிந்து , பின்பற்றி பாடும் வகையில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இப்படிப்பட்ட நமது அரிய பஜன் பாடல்களை இளையதலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கப்பட்டது தான் பஜன் சாம்ராட். இறைவன் அருளைப் பெறுவதற்கு 1.ஸ்ரவணம் 2.கீர்த்தனம் 3.ஸ்மரணம் 4.பாதசேவனம் 5.அர்ச்சனம் 6.வந்தனம் 7.தாஸ்யம் 8.ஸக்யம் 9.ஆத்ம நிவேதனம் ஆகிய ஒன்பது விதமான பக்தி நெறிகள் இருக்கின்றன.

இன்றைய மனதை அடக்கி தியானம் செய்வது கடினம். கண்ணைத் திறந்தாலாவது ஒரே ஒரு பொருள்தான் கண்முன் தெரியும்.கண்ணை மூடித் தியானம் செய்ய ஆரம்பித்தாலோ ஆயிரத்தெட்டு பொருட்கள் நம் மனத்திரையில் விரியும். ஆகவே மேற்கண்ட பக்தி நெறிகளுள் ஒன்றான கீர்த்தனம் என்கிற முறையில் வருவது தான் பஜன் பாடல்கள். இறைவனை நினைத்து குழுவாக பஜன் பாடல்கள் பாடும் பொழுதும் கேட்கும் பொழுதும் மன அழுத்தங்கள் குறைந்து நேர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெரும்பாலான நோய்களுக்கு மாற்று மருத்துவமாக பஜன் பாடல்கள் திக்ழ்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்று. அந்த அடிப்படையில் நாங்கள் அறிவித்திருந்த பஜன் சாம்ராட் போட்டியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். நிறைய ஐடி மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டனர். சாதி ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ பின் தங்கியவர்கள் மட்டுமல்லாது மற்ற மதத்துச் சிறுவர்களும் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி..” என்று பேசினார்.

பஜன் சாம்ராட் நிகழ்ச்சியின் இயக்குனர் ஜெய் ஆதித்யா கூறும் போது, “பஜன் சாம்ராடின் தகுதிச்சுற்று சென்னை, பெங்களூரு, தஞ்சாவூர், கோவை மற்றும் ஹூப்ளியில் நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட பஜன் குழுக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 24 குழுக்கள் முதற்சுற்றுக்கும் அவற்றிலிருந்து 12 குழுக்கள் காலிறுதிக்கும் அவற்றிலிருந்து 8 குழுக்கள் அரையிறுதிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். இதிலிருந்து ஐந்து அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதிச் சுற்று வரும் செப்டம்பார் 15 மாலை 5 மணிக்கு சென்னை மீனாட்சி கல்லூரி அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியிலும் அதன் இணையத்தளத்திலும் நேரடியாகப் பார்த்து மகிழலாம். மேலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறுவர்களுக்கு ரூ 10 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது…” என்று கூறினார்.

இறுதிச் சுற்றின் நடுவர்களாக பஜன் சாம்ராட் பத்மஸ்ரீ அனுப் ஜலோட்டா, கர் நாடக இசைப்பாடகி பத்மஸ்ரீ சுதா ரகு நாதன் மற்றும் ஸ்ரீ மல்லிகார்ஜுன பாகவதர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்திலிருந்து மூன்று அணியினரும், கேரளாவிலிருந்து மற்றும் கர் நாடகாவிலிருந்து தலா ஒரு அணியினருமாக ஐந்து அணிகள் இறுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக பஜன் பாடல்களைப் பாடுவதாலும் கேட்பதாலும் உண்டாகும் நலன்களை அறிவியல் பூர்வமாக விளக்கும் வீடியோ திரையிடப்பட்டது. பெங்களூரைச்சேர்ந்த செண்டர் ஃபார் மீடியா மற்றும் மேனஜ்மெண்ட் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே ஜெய்சங்கர் ரெட்டி மற்றும் டாக்டர் அனிதா ஆகியோர் பஜன் பாடல்களால் மூளையில் ஏற்படும் நேர்மறை எண்ணங்களால் ஏற்படும் அதிர்வுகளை அறிவியல் பூர்வமாக படம்பிடித்து விளக்கினர்.

ஸ்ரீ சங்கரா டிவி’யின் பஜன் சாம்ராட்- மாபெரும் இறுதிச் சுற்று செப்டம்பர் 15 மாலை 5 மணிக்கு மீனாட்சி கல்லூரி அரங்கில் – ரூ 10 லட்சத்தை வெல்லப்போவது யார்??