தறிகெட்டு சென்ற கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பெண்களுக்கு பலத்த காயம்:

இன்று (22-அக்டோபர்-’14) மாலை சுமார் 4:30 மணியளவில், சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மேல் பூந்தமல்லி மார்கமாக சென்றுகொண்டிருந்த ஒரு ‘போர்ட் ஈகோஸ்டார்’ (வாகனம் என் TN 10 AM 2999) தறிகெட்டு சென்று சாலையின் மதில்சுவரின் மீது ஏறி எதிர்வாடையில் (பாரிமுனை மார்கமாக) சென்றிருந்த TVS ஸ்கூட்டி (வாகனம் என் TN 02 AR 4480) இருசக்கிர வாகினத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சகோதிரிகள் லாவண்யா, வயது 19 மற்றும் கார்த்திகா, வயது 21 காயமடைந்துள்ளனர். காரில் ஓட்டுனர் மற்றும் அவருடன் ஒருவரும் இருந்ததாக சொல்லப்படுகிறது. விபத்து நடந்த உடன் காரின் ஓட்டுனரும் அவருடன் வந்தவரும் சம்பவ இடத்தில்லிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

இருசக்கர வாகனத்தை ஒட்டி சென்ற லாவண்யாவ’வுக்கு பின் தலை, கழுத்து மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமும், கார்த்திகா’விற்கு சில காயங்களும் ஏற்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கூறினார். விபத்து நடந்த உடன் பொதுமக்கள் காவல்துறைக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. விபத்து நடந்து சுமார் இருபது நிமிடங்களுக்கு பின் தான் காவல்துறையும், ஆம்புலன்சும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகவே, பொதுமக்கள் அவ்வழியே சென்ற ஒரு காரில் அடிபட்ட்ட இரு பெண்களையும் கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அங்கு கூடி இருந்த பொதுமக்கள் காரில் பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் தண்ணி இருந்ததாகவும், அந்த காரில் இருந்து ஓடிய ஓட்டுனரும் அவருடன் இருந்தவரும் குடிப்போதையில் இருந்ததாகவும் சொல்கின்றனர். கார் தறிகெட்டு சென்று மோதியத்தில் காரின் முன் இரண்டு சக்கர டயர்களும் பங்க்சர் அடைந்துள்ளது. கார் விபதுக்குள்ளனத்தை பார்க்கும்போது வாகன ஓட்டுனர் கைபேசியை உபயோகித்திருப்பார் என தோன்றுகிறது.
IMG_2723

IMG_2725

IMG_2730

IMG_2731

IMG_2736

IMG_2739

IMG_2743