50 வயதுக்கு மேற்பட்ட கிழவனாக நடிக்கிறார் லாரன்ஸ்..!

எல்லாம் நன்மைக்கே என்று சொல்வார்களே.. அது மாதிரி ‘முனி-3 கங்கா’ படப்பிடிப்பின்போது லாரன்ஸ் விபத்தில் சிக்கியதும் ஒரு வகையில் அவருக்கு நல்லதாக அமைந்துவிட்டது. ஆம்.. ஓய்வில் இருந்த அந்த ஐந்து மாதங்களில் அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துவிட்டார் லாரன்ஸ்,

இதில் ஒரு புதுமையாக, ஒரு படம் ஓடும் இரண்டரை மணி நேரத்தில் ரசிகர்களுக்கு இரண்டு படங்களை காட்டவிருக்கிறார். அதற்கேற்ற மாதிரி படத்தின் பெயரைக்கூட ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ன்னு வித்தியாசமாக வைத்திருக்கிறார்.

அதாவது இடைவேளைவரை வரை ஒரு படம்.. அதன்பிறகு ஒரு படம்.. இந்த இரண்டு படங்களை இயக்குவதும் அதில் கதாநாயகனாக நடிப்பதும் லாரன்ஸ் தான். ஆனால் இரண்டு கதைகளும் வேறு.. இரண்டில் நடிக்கும் நடிகர்களும் வேறு..

ஒரு படத்தின் பெயர் ‘கருப்பு துரை’.. இதில் லட்சுமிராய் கதாநாயகியாக நடிக்கிறார்.. இன்னொரு படத்தின் பெயர் ‘கிழவன்’.. இதில் ஆண்ட்ரியா தான் ஹீரோயின்.. கிழவன் படத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட கிழவனாக நடிக்கிறார் லாரன்ஸ்..! கவிஞர் விவேகா இந்தப்படத்தின் பாடல்களை எழுதுவதுடன் வசனகர்த்தாவாகவும் அடியெடுத்து வைக்கிறார்.

இரண்டு படத்திற்குமே இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைக்க இருக்கிறார்கள். அதில் லியோன் என்பவர் அனிருத்திற்கு போட்டியாக வருவாரோ என்று சொல்லும்படியாக ஒல்லிப்பிச்சானாகவும் சின்ன வயது பையனாகவும் இருப்பது ஆச்சர்யம்..