நடன சூறாவளி சூரி… ரயில் பறவை சிங்கமுத்து..!

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துல சூரிக்கு கிட்டத்தட்ட கதாநாயகன் விமலுக்கு இணையான ரோல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். அப்படின்னா டான்ஸ், பைட்லாம் இல்லாமலா..? சூரி டான்ஸ்ல அசத்தினதை பாத்து நேத்து இந்தப்படத்தோட இசை வெளியீட்டு விழா மேடையில நடிகரும் இயக்குனருமான மனோபாலா, சூரியை பாராட்டி ‘நடன சூறாவளி’ன்னு பட்டம் கொடுத்திருக்கார்.

இன்னொரு விஷயம்… இந்தப்படத்துல சிங்கமுத்து முக்கியமான ரோல்ல நடிச்சுருக்கார். அதாவது 25 வருஷமா அவரு ரயில்ல டிக்கெட் எடுக்காம சுத்திக்கிட்டு இருக்கிற ரயில் பறவையாம். எதுக்காக இப்படி சுத்துறாராம்..? எல்லாம் ஓசிக்குடிக்காகத்தான்..

அதாவது ரயில்ல வர்றவனுங்கள்ல எவன் எவன் தண்ணி அடிப்பான்னு பாத்து, அவனுங்க கூட ஜாய்ன் பண்ணிக்கிட்டு எந்த எந்த ஸ்டேஷன் பக்கத்துல சரக்கு கிடைக்கும்.. எந்த எந்த கிராசிங்ல, சிக்னல்ல ரயில் எவ்ளோ நேரம் நிக்கும்.. அதுக்கு பக்கத்துல எங்க ஒயின் ஷாப் இருக்குதுன்னு புல் டீட்டெய்ல் வச்சுருப்பாரு.. இதுல சிக்குற ஆளுங்களை கூட்டிட்டு போய் கவுக்குறதுதான் இவரோட வேலையாம்..

எப்படித்தான் யோசிக்கிறாங்க இந்த மாதிரி கேரக்டர்களை..?