மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான  விருது வழங்கப்பட்டது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி.ஹேமலதா பங்கேற்கிறார், மருத்துவர்...

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியா அவர்களின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது.இந்த பாடலின் பெயர் ( Honestly ) "ஹானஸ்ட்லி". இந்த...

தேசிய கட்சிகள் மற்றும் நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் நான்கு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ்நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில் நுட்பத்தில்படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் “மாலை நேரத்து மயக்கம்”. நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்துவாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்துகற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது.  எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வாசிப்பு அனுபவமும் கொஞ்சம்உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ் . “பரியேறும் பெருமாள்” கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம்வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பகுதிகள் . அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள் ,வெயில் மனிதர்கள்,விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும், கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிற ஆசை. கதைக்களம் , அதன் வேகம் இதற்குஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். 40 கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும்  படம் பார்க்கும்பொழுதுமகிழ்ச்சியாக இருந்தது.  பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது.   கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம் என்னை உற்சாகமூட்டியதும் ,தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்துமுடிக்க பெரும் உதவியாக இருந்தது. எந்த  இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்த படத்தில்நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது , திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் , அழகையும்  இந்த படத்தில் பெரிதும் எதிர்பார்க்கலாம்” என்றார்  உற்சாகமாக.

ஒரு நடிகரிடம் அப்பாவியான முகம் இருந்தாலே அது அவருக்கு மிகப்பெரிய சொத்து. ரசிகர்களை மிக எளிதாக கவரக்கூடிய தன்மை அதற்கு உண்டு. எல்லா வகை...

'சண்டக்கோழி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் - டைரக்டர் லிங்குசாமி கூட்டணியில் தயாராகியுள்ள படம் 'சண்டக்கோழி 2'. கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் மற்றும் பலர்...

நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கடந்த 16ஆம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய வீடியோ வைரலானது. அப்போது முதல்வர்...

தேசிய விருது வென்ற  நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் " வட சென்னை...

தமிழக ஆளுனருடன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிவாசல் பகுதி...